12. ஜென்சி
மனம் : என்னடி நீ ஜென்சிய தெரியாதா??????
நான் : இல்ல, இப்ப சமீபத்துல தான் கேள்விப்பட்டேன்.
மனம் : உனக்கு "தெய்வீக ராகம்" பாட்டு பிடிக்கும்ல?
நான் : ம்...... ரொம்ப.......
மனம் : அது யார் பாடினதுன்னு நெனச்ச?
நான் : ஜானகின்னு.............
மனம் : அடிப்பாவி, இவ்வளவு நாள் ஜென்சிய தெரியாம வாழ்ந்திருக்க....... உன்ன நெனச்சா வெக்கமா இருக்கு.........................................
நான் : ஒரு சந்தேகம்......
மனம் : கேட்டு தொல...........
நான் : இவ்வளவு அற்புதமான பாடகி, சமீபத்திய படங்கள்ல பாடலியே ஏன்?
மனம் : ?????????????
நான் : இசையமைப்பாளர்கள் வாய்பளிக்கலையோ?
மனம் : ?????????????
நான் : தமிழ் தெரியாதவங்கல, தமிழ கொலை பண்றவங்கல, பாட வைக்கறாங்க, இவங்கல பாட வைக்கலாம்ல?
மனம் : ???????????????????????????????????????????
பி.கு. : யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.



1 Comments:
அது சரி உங்க மனம் திடீர்னு ஏன் ஜென்சிய நினைச்சுகுச்சு...எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... :-)
Post a Comment
<< Home