பிரபஞ்சம்

Saturday, July 15, 2006

13. நாளை உலகம் இல்லையென்றால்………….

இருப்பது 24 மணி நேரமே…………….

முதலில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் செல்வேன். அங்கே உள்ளவர்களுடன் விளையாடி, ஆடி, பாடி சந்தோஷமாக கழிப்கேன். பின் என் பயணம் ஆரம்பம் ஆகும்.

நான் பார்க்க விரும்பிய ஊர்/கோயில்களுக்கு செல்வேன். மயிலை கற்பகாம்பாள், சாய் பாபா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, அஷ்டலஷ்மீ, பெசன்ட் நகர் அருபடை முருகன், முருகனின் அருபடை வீடு, உப்பிலியப்பர், எங்கள் ஊர் நடராஜர், கோவிந்தராஜர், சிவகாமி, தில்லை காளி, மேலும் விருதகிரிசுவரர், மீனாட்சி, இன்னும் சில கோயில்கள், தெய்வத்தின் பெயர் தெரியாததால் குறிப்பிடவில்லை.

மேலும் சில மனித(தெய்வங்களையும்)ர்களையும் சந்திப்பேன். உறவினர்கள் சிலர், இசைஞானி, பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, அணுராதா ரமணன், இறையன்பு, வை.கோ., சாலமன் பாப்பையா, தென்கச்சி கோ.சுவாமினாதன், கீதா சாம்பசிவம், தி.ரா.ச, பொன்ஸக்கா, கார்திகேயன், கோபாலன் இராமசுப்பு, கொடுமை உஷா, shree, சுபா, ஷ்யாம், யோசிப்பவர், மனசு, நன்மனம், வேதா, குட்டிசுவரு, இன்னும் சிலர். ஐயோ ஒருத்தர விட்டுட்டேன், நம்ம அஸின் தம்பி அம்பி தான்.

எல்லாரையும் பார்த்துட்டு கடைசியா கன்னியாகுமரி சென்று அம்மனை தரிசிச்சுட்டு, வள்ளுவரை பாத்துட்டு விவேகானந்தர் மண்டபம் போய் அவரையும் பாத்துட்டு, அங்கேயே அமைதியா உக்காந்துடுவேன்.

பயணம் : ஆரம்பம் – சென்னை, முடிவு – கன்னியாகுமரி, பாதை – தெரியாது.

“மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்”

Thursday, July 13, 2006

12. ஜென்சி

மனம் : என்னடி நீ ஜென்சிய தெரியாதா??????
நான் : இல்ல, இப்ப சமீபத்துல தான் கேள்விப்பட்டேன்.
மனம் : உனக்கு "தெய்வீக ராகம்" பாட்டு பிடிக்கும்ல?
நான் : ம்...... ரொம்ப.......
மனம் : அது யார் பாடினதுன்னு நெனச்ச?
நான் : ஜானகின்னு.............
மனம் : அடிப்பாவி, இவ்வளவு நாள் ஜென்சிய தெரியாம வாழ்ந்திருக்க....... உன்ன நெனச்சா வெக்கமா இருக்கு.........................................
நான் : ஒரு சந்தேகம்......
மனம் : கேட்டு தொல...........
நான் : இவ்வளவு அற்புதமான பாடகி, சமீபத்திய படங்கள்ல பாடலியே ஏன்?
மனம் : ?????????????
நான் : இசையமைப்பாளர்கள் வாய்பளிக்கலையோ?
மனம் : ?????????????
நான் : தமிழ் தெரியாதவங்கல, தமிழ கொலை பண்றவங்கல, பாட வைக்கறாங்க, இவங்கல பாட வைக்கலாம்ல?
மனம் : ???????????????????????????????????????????

பி.கு. : யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

Tuesday, July 11, 2006

11. பிறந்தநாள்

நேற்று என் தோழிக்கு (அலுவலக தோழி) பிறந்தநாள். பெருசா ஒன்னும் இருக்காது, பிறந்தநாள் குழந்தைக்கு cream face pack போட்டு விடுவோம். அவங்களுக்கு மட்டுமில்ல, எங்க (என்) கைல மாட்றவங்களுக்கு போட்ருவோம். இப்படி கொண்டாட்டம் முடிந்து வந்தா, வில்லனும் வந்துட்டான், வேற யாருங்க எல்லாம் படியளக்கற மவராசன் client தான். அவன் கேட்டதெல்லாம் குடுத்துட்டு வீடு போய் சேர மணி 8:30 ஆகிடுச்சு.

ஆனாலும் நாள், அமைதியா சந்தோஷமா போச்சுங்க.

Monday, July 10, 2006

10. I've kidnapped your kid

There was a Sardarji who was down on his luck.

In order to raise some money he decided to kidnap a
kid and hold him for ransom.


He went to the playground, grabbed a kid, took him
behind a tree, and told him, "I've kidnapped you."

Sardarji then wrote a note saying:

"I've kidnapped your kid.

Tomorrow morning, put Rs.2,00,000 in a paper bag
and put it beneath the mango tree on the north side
of the city playground".

Signed: "A Sardarji".

Sardarji then pinned the note to the kid's shirt and
sent him home to show it to his parents.

The next morning the Sardarji checked, and sure
enough a paper bag was kept beneath the mango

tree.The boy was sitting next to the bag. Sardarji
opened up the bag and found the Rs.2,00,000

in cash with a note saying:

"How can a sardarji do this to a fellow Sardarji?

Take the money, and Please leave my son."

Signed: Another Sardarji